
எத்தனை முறைதான்... எத்தனை பேரைத்தான்....
காதலிப்பாய்...
இன்று ஈட்டிகள் பாய்ந்து பாய்ந்து
ozone னைவிட ஓட்டைகள் அதிகம் ..
உன் இதயத்தில்தான் !!!!
எப்போதாவது பூத்து சிரிக்கும் என் வீட்டு ரோஜா
எப்போதும் அழுது வடியும் என் கண்ணாடி பிம்பம்
எப்போதாவது கேட்கப்படும் இனிய வார்த்தைகள்
எப்போதும் கேட்கும் எதிர்வீட்டு குழந்தையின் அழுகுரல்
இவற்றில் எல்லாம் வெளிபடுவது........கருவிலேயே மடிந்த...
இல்லை.... கொல்லப்பட்ட குழந்தையின் மரண ஓலம்...
மானசீகமாய் பலமுறை கேட்டும்...
இல்லாத குழந்தை இடமிருந்து...
எங்கிருந்து வரும் மன்னிப்பு!!???