
இதழ் விரித்ததால், மொட்டு மலரானது ...
நீ என் இதழ் மூடினாய், ஏனோ நான் மலர்ந்தேன் ...
இதழ்கள் மூட, இமைகளும் மூடின...
மூடிய இமைகளால் சிலநேரம் மறந்திருப்போம்
பரந்த இவ்வுலகையும்! நீயும் நானும் யாரென்றும் !!!!
சருகுகளுக்கு மட்டுமே சொந்தமான எனது தோட்டத்தில் முதன் முதலில் ஒரு துளிர்
நீர் பாய்ச்சி உரமிட்டது என் தவறா? நிஜமென நினைத்தது என் தவறா?
செடியாகி மரமாகி பூத்து குலுங்குகையில், பூப்பறிக்க நீ வருவாயென உச்சி கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுது மனசு
பூவை காயாக்கி கனியாக்க வருவாயென நினைதேன்... கிளையோடித்து சென்றது ஏன்?
அருந்த ஊஞ்சலில் சிதறிய என் இதயத்தின் சில்லுகள் சிலவற்றை காணவில்லை ....
வேண்டாத மரத்தை வேரோடு பிடுங்கவும் முடியாமல் விட்டு வைக்கவும் முடியாமல் வெட்டி மட்டும் வைத்தேன் ... மீண்டும் துளிர்க்குமென்று தெரியாமல் ...
மறுபடியும் செடி, மரம், பூ, காய், கனி, வேட்டல், வளர்தல் ... சுழற்கிறது என் வாழ்வு இப்படி...
எத்தனை முறை சொன்னாலும், ஏமாற்றம் அடைந்தாலும் ...
எகத்தாளம் பிடித்த இதயத்திற்கு தெரிவதில்லை... உன் மௌன வார்த்தைகளால் மடிவது மரம் மட்டுமல்ல என் மனமும்தானென்று !!!!